ADDED : ஜூன் 12, 2025 10:24 PM
தொண்டாமுததுார்; ஓணாப்பாளையம், ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் மாலதி, 18. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். கல்லுாரியில் படிக்கும்போது, ஒருவரை காதலித்துள்ளார். இதுகுறித்து பெற்றோருக்கு தெரிந்ததும், கல்லுாரிக்கு போக வேண்டாம் என படிப்பை நிறுத்திவிட்டனர்.
அதன்பின், மாலதி, வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போதும், காதலனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மாலதியிடம் இருந்து பெற்றோர் மொபைல் போனை வாங்கி விட்டனர். மன விரக்தியில் இருந்த மாலதி, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.