/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளிகளில் போக்குவரத்து விதிமுறை; விழிப்புணர்வு கையேடு வெளியிட்டார் அமைச்சர் மகேஷ் பள்ளிகளில் போக்குவரத்து விதிமுறை; விழிப்புணர்வு கையேடு வெளியிட்டார் அமைச்சர் மகேஷ்
பள்ளிகளில் போக்குவரத்து விதிமுறை; விழிப்புணர்வு கையேடு வெளியிட்டார் அமைச்சர் மகேஷ்
பள்ளிகளில் போக்குவரத்து விதிமுறை; விழிப்புணர்வு கையேடு வெளியிட்டார் அமைச்சர் மகேஷ்
பள்ளிகளில் போக்குவரத்து விதிமுறை; விழிப்புணர்வு கையேடு வெளியிட்டார் அமைச்சர் மகேஷ்
ADDED : ஜூன் 12, 2025 10:24 PM

கோவை; ''பள்ளி மாணவர்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் பேசினார்.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் உயிர் அமைப்பு சார்பில் 'உயிர் குட்டி காவலர் சாலை பாதுகாப்பு திட்டம்' பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேடு வெளியீட்டு விழா, ஆர்.எஸ்., புரம், மாநகராட்சி கலை அரங்கில் நேற்று நடந்தது.
பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில், 3.15 கோடி இரு சக்கர வாகனங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மக்கள் பொது போக்குவரத்தையும் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி, பாதாசரிகளுக்கும் விதிமுறை உள்ளது.
விபத்துகளை தவிர்க்கும் தொழில்நுட்பம் மனிதர்களால் உருவாக்கப்படுகிறது. இதில், தொழில்நுட்பம் தயாராகத்தான் இருக்கிறது; ஆனால், அதை கடைபிடிக்க மனிதர்கள் தயாராக இல்லை. விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கும் பொறுப்பு நமக்கு உண்டு.
பள்ளி பருவத்தில் மாணவர்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது, அவர்களது குடும்பத்தினர், சமுதாயத்துக்கும் சென்றடையும். பள்ளிகளில் அடையாள பலகைகளை மாணவர்களிடம் காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது மனதில் உள்வாங்கும்.
போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். ஆசிரியர்களால் மாணவர்களிடம் சரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, உயிர் திட்டத்தை வெற்றிகரமாக கொண்டுவர முடியும். இதில், அனைவரது ஒத்துழைப்பும் தேவை.
இவ்வாறு, அவர் பேசினார்.
பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன், அறங்காவலர்கள் நந்தினி, மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.