/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காதினுள் இரைச்சலா உடனே சோதிக்கணும் காதினுள் இரைச்சலா உடனே சோதிக்கணும்
காதினுள் இரைச்சலா உடனே சோதிக்கணும்
காதினுள் இரைச்சலா உடனே சோதிக்கணும்
காதினுள் இரைச்சலா உடனே சோதிக்கணும்
ADDED : ஜூன் 30, 2025 11:18 PM
கேட்கும் திறனில் ஏற்படும் பிரச்னைகளால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விளக்குகின்றனர், ஹியரிங் எய்ட் சென்டர் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆடியாலஜிஸ்ட் கணேஷ் மற்றும் தாரணி.
காதில் உள்ள திரவத்தின் காரணத்தினாலேயே, நாம் சமநிலையில் இயங்க முடிகிறது. இந்த சமநிலை தவறும் பொழுது நமக்கு தலைச்சுற்றல் ஏற்படுகிறது. வர்ட்டிகோ என்று அழைக்கப்படும் இந்த பிரச்னைக்கு, முக்கியமாக நாம் காது பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். காது செவிப்பறையில் உள்ள ஏர்ட்ரம்மில், ஏற்படும் துவாரங்கள் போன்றவற்றாலும் நம்முடைய காதுகளில் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
இதன் முதல் அறிகுறி, 'டினிடஸ்' என்று அழைக்கப்படும் காதில் ஒலிக்கும் ஓர் சத்தமே. இது தொடர்ந்து இருக்கும் போது, மெல்ல மெல்ல கேட்கும் திறன் குறைகிறது.
உடனடியாக திறமையும் அனுபவம் வாய்ந்த, எச் ஏ சி நிறுவனத்தின் நிபுணர்களை உடனடியாக அணுகுவதன் மூலம் சரியான தீர்வை பெற முடியும்
கேட்கும் திறன் குறைந்திருப்பதை, ஆரம்ப கட்டத்திலேயே அறிந்தால், அதற்கான தீர்வுகளை நாம் சுலபமாக பெற்றுக் கொள்ளலாம். கண்களுக்கு கண்ணாடியை போல, காது பிரச்னைகளுக்கும் காது கருவிகள தயக்கமின்றி அணிய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.