/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விடுதியில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம் விடுதியில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம்
விடுதியில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம்
விடுதியில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம்
விடுதியில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 07, 2025 11:36 PM
கோவை: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ மற்றும் மாணவியர் அரசு விடுதியில் சேர்ந்து பயனடைய, மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கலெக்டர் அறிக்கை:
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவர்களும், சேரத் தகுதியுடையவர்கள்.
விடுதிகளில் மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும். பெற்றோர் மற்றும் பாதுகாவலரது ஆண்டு வருவாய் 2,00,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், அல்லது கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி தேதி.