ADDED : ஜூன் 21, 2025 12:52 AM

இன்றைய அவசர உலகில், பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்னையாக, மன அழுத்தம் இருக்கிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்குள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. அதை தக்க வைப்பது மிகவும் சிரமம்.
மனப்போராட்டங்கள் ஒரு புறம் இருந்தாலும், அவற்றில் இருந்து விடுபட யோகா, தியானம் உட்பட உடல், மனப்பயிற்சிகள், நமக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளன. யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல, அது ஒரு முழுமையான வாழ்வியல் முறை.
யோகா என்ற சொல்லுக்கு ஒன்றிணைதல் என்று பொருள். இது, ஒருவரின் உள் நிலைக்கும், பிரபஞ்சத்துக்கும் இடையே உள்ள தொடர்பை உணர்த்துவது. ஒருவரின் இயல்பான தன்மையை உணரும்போது, அதைத் தான் 'யோகா' என்று சொல்கிறோம்.
மனசோர்வு, கவனச்சிதறல், பதற்றம், வேண்டாத பயம் ஆகியவற்றை போக்குகிறது. மனது ஒருநிலைப்படுவதால், எடுத்த காரியங்களில், கவனம் செலுத்த முடிகிறது.
பணித்திறன், நிர்வாகிகளின் ஆளுமை திறன் அதிகரிக்கிறது.
நன்மைகள் ஆயிரம், ஆயிரமாக கொட்டி கிடப்பதால், யோகாவின் மகத்துவத்தை உலக நாடுகள் உணர தொடங்கியுள்ளன.