/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கம்பராமாயணம் படிக்க தேவையானது என்ன? எழுத்தாளர் பெருமாள் முருகன் சுவாரஸ்யம் கம்பராமாயணம் படிக்க தேவையானது என்ன? எழுத்தாளர் பெருமாள் முருகன் சுவாரஸ்யம்
கம்பராமாயணம் படிக்க தேவையானது என்ன? எழுத்தாளர் பெருமாள் முருகன் சுவாரஸ்யம்
கம்பராமாயணம் படிக்க தேவையானது என்ன? எழுத்தாளர் பெருமாள் முருகன் சுவாரஸ்யம்
கம்பராமாயணம் படிக்க தேவையானது என்ன? எழுத்தாளர் பெருமாள் முருகன் சுவாரஸ்யம்
ADDED : ஜூன் 21, 2025 12:51 AM

கோவையில் களம் அமைப்பு சார்பில், இலக்கிய சந்திப்பு கூட்டம், சலீவன் வீதியில் உள்ள மாரண்ணகவுடர் பள்ளி அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, கவிஞர் சுகுமாரன் தலைமை வகித்தார்.
எழுத்தாளர் பெருமாள்முருகன் படைப்புகள் குறித்து, ஆய்வு மாணவர்கள் பவதாரணி, மதிபுகழேந்தி, சதீஸ்குமார் மற்றும் எழுத்தாளர் ஜோதிமணி ஆகியோர் கருத்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, எழுத்தாளர் பெருமாள்முருகன் பேசியதாவது:
இங்கு என் படைப்புகள் குறித்து பேசியவர்கள், நல்ல விமர்சன உரையை வழங்கி உள்ளனர். கொங்குநாட்டு உணவுகள் பற்றி, நான் எழுதிய கட்டுரைகள் குறித்தெல்லாம் இங்கு பேசினர். கொங்கு பகுதியில் சமைக்கப்படும் உணவு வகை எளிமையானது, மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் செட்டிநாட்டு உணவு வகை போல், விதவிதமான பதார்த்தங்களில் இருக்காது. நம் மரபின் தொடர்ச்சியாக, அந்த உணவுகள் இன்றும் இருப்பதால், அதை பதிவு செய்து இருக்கிறேன். பொதுவாக, இலக்கியம் படிப்பவர்களுக்கு புலமை மட்டும் இருந்தால் போதாது; ரசனையும் இருக்க வேண்டும். அப்போதுதான் இலக்கியத்தை கலை உணர்வுடன் ரசிக்க முடியும். உதாரணமாக, கம்பராமாயணம் படிப்பவர்களுக்கு, புலமையுடன் ரசனையும் இருந்தால், கம்பரின் கவித்துவத்தை முழுமையாக அனுபவித்து படிக்கலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பேராசிரியர்கள் துரைமுருகன், ரவிச்சந்திரன், கவிஞர்கள் அறிவன், செந்தாமரை, அமரநாதன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.