/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உலக முதலீட்டாளர் மாநாடு: கோவையில் நேரடி ஒளிபரப்புஉலக முதலீட்டாளர் மாநாடு: கோவையில் நேரடி ஒளிபரப்பு
உலக முதலீட்டாளர் மாநாடு: கோவையில் நேரடி ஒளிபரப்பு
உலக முதலீட்டாளர் மாநாடு: கோவையில் நேரடி ஒளிபரப்பு
உலக முதலீட்டாளர் மாநாடு: கோவையில் நேரடி ஒளிபரப்பு
ADDED : ஜன 08, 2024 01:41 AM

கோவை;சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு, கோவையில் உள்ள டைடல் பார்க் அரங்கில், நேற்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கோவையை சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனத்தினர் பங்கேற்றனர். கலெக்டர் கிராந்திக்குமார் கூறுகையில், கோவை மாவட்டத்தில் உள்ள 211 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வரும் ஆண்டுகளில் 6,575 கோடி ருபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இங்கு, இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள், உதிரி பாகங்கள் உற்பத்தி, எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி, விமான உதிரி பாகங்கள் ராணுவ பாதுகாப்பு தளவாடங்கள், பிளாஸ்டிக், மருந்து பொருட்கள், ஜவுளி பொருட்கள் உற்பத்திக்கான வாய்ப்புகள் உள்ளன, என்றார்.