/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
ADDED : ஜூன் 07, 2025 01:22 AM

கோவை; கோவையில் உலக சுற்றுச்சூழல் தினம், பல்வேறு அமைப்புகள் சார்பில் மரக்கன்று நடல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி கொண்டாடப்பட்டது.
வேளாண் பல்கலை
வேளாண் பல்கலை, பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டுவருதல்' என்ற கருப்பொருளில், உலக சுற்றுச் சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் தலைமை வகித்தார். கல்லூரி ஈகோ கிளப் சார்பில், 'ஈகோத்தான் 2025 - பசுமைப் போராளிகளின் குரலும் கனவுகளும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறை மாணவர்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். கழிவில் இருந்து வளம் என்ற அடிப்படையில், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மூவர் அமரக்கூடிய மேஜையை, மாணவர்கள் உருவாக்கியிருந்தனர். மாணவர்கள், பூமியைப் பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர். டீன் ரவிராஜ், பேராசிரியர்கள் பங்கேற்றனர்
அண்ணா நகர் திட்ட வளாகம்:
வனத்துறை, தமிழக நகர்ப்புற வசிப்பிட மேம்பாட்டுக் கழகம், வன உயிரின மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், அண்ணாநகர் திட்ட வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டன. மதுக்கரை வன அலுவலர் அருண்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஐ.எப்.ஜி.டி.பி.,
கோவை, இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு மையத்தில் (ஐ.எப்.ஜி.டி.பி.,)யில், சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு, கடந்த மே 22ம் தேதி முதல், ஜூன் 5ம் தேதி வரை 15 நாட்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
விழிப்புணர்வு பிரசார இயக்கம், நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், தூய்மை இயக்கம், விழிப்புணர்வு குவிஸ், ஓவியம், மொபைல் போட்டோகிராபி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், பிளாஸ்டிக் தவிர்ப்பு பேரணி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டன. குப்பையில் இருந்து வளம், குப்பை மேலாண்மை கொள்கைகள் உள்ளிட்ட இணையவழி கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
ஐ.எப்.ஜி.டி.பி., இயக்குநர் யசோதா தூய்மை இயக்கத்தை துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மைய திட்ட அலுவலர் விக்னேஷ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.