/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரங்கநாதர் கோவில் தேருக்கு ஷெட் அமைக்கும் பணி துவக்கம் அரங்கநாதர் கோவில் தேருக்கு ஷெட் அமைக்கும் பணி துவக்கம்
அரங்கநாதர் கோவில் தேருக்கு ஷெட் அமைக்கும் பணி துவக்கம்
அரங்கநாதர் கோவில் தேருக்கு ஷெட் அமைக்கும் பணி துவக்கம்
அரங்கநாதர் கோவில் தேருக்கு ஷெட் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : ஜூன் 15, 2025 10:17 PM

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, பாதுகாப்பாக, கான்கிரீட் பில்லரில் இரும்பு துாண்கள் அமைக்கும் பணிகள் துவங்கின.
கோவை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். பழமையான இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டதாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத் தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்பர். தேர் திருவிழா முடிந்த பின், தேருக்கு பாதுகாப்பு கவசம் தகர சீட்டால் அமைக்கப்படும்.
தகர சீட்டுகள் துருப்பிடித்திருந்ததால், புதிய ஷெட் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக நான்கு பக்கமும் நில மட்டம் வரை கான்கிரீட் பில்லர்கள் அமைக்கப்படும். அதன் மீது, நான்கு பக்கம், 30 அடிக்கு இரும்பு துாண்கள் அமைக்கப்படும். தேருக்கு மேலேயும், கீழேயும், சுற்றியும் ஜிங் சீட்டால், கவசம் அமைக்கப்படும். இடையில் பிளாஸ்டிக் கண்ணாடி சீட்டால் கவசம் அமைக்கப்பட உள்ளது. கான்கிரீட் பில்லர்கள் மீது, இரும்பு துாண்கள் அமைக்கும் பணிகள் நேற்று துவங்கின. முன்னதாக சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.