/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மகளிர் உரிமை தொகை முகாம் நடத்தவில்லை; இ.கம்யூ., புகார் மகளிர் உரிமை தொகை முகாம் நடத்தவில்லை; இ.கம்யூ., புகார்
மகளிர் உரிமை தொகை முகாம் நடத்தவில்லை; இ.கம்யூ., புகார்
மகளிர் உரிமை தொகை முகாம் நடத்தவில்லை; இ.கம்யூ., புகார்
மகளிர் உரிமை தொகை முகாம் நடத்தவில்லை; இ.கம்யூ., புகார்
ADDED : ஜூன் 15, 2025 10:29 PM
கோவை; கோவை மாநகர மேற்கு மண்டல ஆலோசனை கூட்டம், பி.என்.,புதுாரில் உள்ள இ.கம்யூ., கிளை அலுவலகத்தில் நடந்தது. இ.கம்யூ., நிர்வாகி தங்கவேல் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மாநகரில் சுகாதாரத் தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக, ஐந்து நாட்களுக்கு மேலாக குப்பை சேகரிக்க தொழிலாளர்கள் செல்லாததால், கடுமையான சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக குப்பை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த சட்டபை கூட்டத்தில், தமிழக அரசு அறிவித்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாம்கள், இந்த மாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடக்கவில்லை.
இந்த முகாம்களை உடனடியாக நடத்தி, உரிமைத்தொகை கிடைக்காத மகளிர்க்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மண்டல குழு துணை பொறுப்பாளர் ஜேம்ஸ், மண்டல செயலாளர் சாந்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.