/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புகையிலை பொருட்கள் விற்பனை; பெண் கைது புகையிலை பொருட்கள் விற்பனை; பெண் கைது
புகையிலை பொருட்கள் விற்பனை; பெண் கைது
புகையிலை பொருட்கள் விற்பனை; பெண் கைது
புகையிலை பொருட்கள் விற்பனை; பெண் கைது
ADDED : மார் 23, 2025 11:46 PM
போத்தனூர் : கோவை. குனியமுத்தூர் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., வீரபாவானந்தம் போலீசாருடன் பி.கே.புதூர் பகுதியில் கடைகளில் புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனை மேற்கொண்டார்.
வினாயகர் கோவில் வீதியில் கெவின் மளிகை கடை அருகே, ஒரு பெண் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்ததில், பி.கே.புதூர், இந்திரா நகரை சேர்ந்த பிரான்சிஸ்மேரி, 43 என்பதும். கூலிப், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக, மொபட்டில் வைத்திருப்பதும் தெரிந்தது. மொபட், மொபைல்போன் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.வழக்கு பதிவு செய்த போலீசார், பிரான்சிஸ் மேரியை கைது செய்தனர்.