/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓட்டலில் விபச்சாரம் ஆறு பேர் மீது வழக்கு ஓட்டலில் விபச்சாரம் ஆறு பேர் மீது வழக்கு
ஓட்டலில் விபச்சாரம் ஆறு பேர் மீது வழக்கு
ஓட்டலில் விபச்சாரம் ஆறு பேர் மீது வழக்கு
ஓட்டலில் விபச்சாரம் ஆறு பேர் மீது வழக்கு
ADDED : மார் 23, 2025 11:47 PM
கோவை : டவுன்ஹால் பகுதியில் ஓட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்ட, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
டவுன்ஹால், மணிக்கூண்டு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் விபச்சாரம் நடப்பதாக, உக்கடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று சோதனை செய்தனர்.
அங்கு இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது உறுதியானது. விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நான்கு பெண்களை, போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தலைமறைவாக உள்ள ஓட்டல் உரிமையாளர் அரவிந்த், மேலாளர் தாமோதரன், ஊழியர்கள் இப்ராகிம், கருப்புசாமி ஆகியோரை தேடி வருகின்றனர்.