/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிளைகளில் உரசுது மின்கம்பி; எப்படி வாழ்றது இதை நம்பி? இந்துஸ்தான் கல்லுாரி ரோட்டில் தலைக்கு மேல் ஆபத்துகிளைகளில் உரசுது மின்கம்பி; எப்படி வாழ்றது இதை நம்பி? இந்துஸ்தான் கல்லுாரி ரோட்டில் தலைக்கு மேல் ஆபத்து
கிளைகளில் உரசுது மின்கம்பி; எப்படி வாழ்றது இதை நம்பி? இந்துஸ்தான் கல்லுாரி ரோட்டில் தலைக்கு மேல் ஆபத்து
கிளைகளில் உரசுது மின்கம்பி; எப்படி வாழ்றது இதை நம்பி? இந்துஸ்தான் கல்லுாரி ரோட்டில் தலைக்கு மேல் ஆபத்து
கிளைகளில் உரசுது மின்கம்பி; எப்படி வாழ்றது இதை நம்பி? இந்துஸ்தான் கல்லுாரி ரோட்டில் தலைக்கு மேல் ஆபத்து

1. தடுமாறும் வாகன ஓட்டிகள்
டவுன்ஹால், இடையர் வீதியில் இருந்து இடது புறமாக தியாகி குமரன் வீதியை அடையும் இடத்தில், சாலையில் சுமார் அரை அடி உயரத்தில் பிளாஸ்டிக் பைப் நீட்டிக் கொண்டுள்ளது. பைக்கில் செல்வோர் இந்த பைப்பில் மோதி, தடுமாறி விழுகின்றனர். கார் போன்ற வாகனங்களின் பம்பர் சேதமடைகிறது.
2. மின்விபத்திற்கு வாய்ப்பு
ஆவாரம்பாளையம், இளங்கோ நகர், 28வது வார்டு, ஏழாவது வீதியில், மின்கம்பத்தின் அடியில் மின்பெட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. பெட்டி முழுவதுமாக உடைந்து, மின் ஒயர்கள் வெளியே தெரியும்படி உள்ளது. குழந்தைகளுக்கு எட்டும் துாரத்தில், ஆபத்தாக உள்ளதால் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
3. மின்ஒயரில் உரசும் கிளைகள்
நவஇந்தியா, இந்துஸ்தான் கல்லுாரி ரோட்டில், இந்துஸ்தான் அவென்யூ பகுதியில், பூங்கா அருகிலுள்ள மரங்களின் கிளைகள் மின்கம்பிகளில் உரசியபடி உள்ளது. மழைக்காலத்தில் மின்விநியோகம் தடைபடுகிறது. மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
4. கடும் துர்நாற்றம்
உக்கடம் கனி ராவுத்தர் வீதி பகுதியில், தொடர்ந்து ரோட்டில் குப்பை கொட்டப்படுகிறது. பாதி சாலை வரை சிதறிக்கிடக்கும் கழிவுகளால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. சாலையோரம் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் உண்ணுகின்றன. சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
5. தெருவிளக்கு பழுது
இடையர்பாளையம், 93வது வார்டு, மணல் காடு குடியிருப்பு பகுதியில், 'எஸ்.பி -2, பி -10' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த இரண்டு மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. கடும் இருள் காரணமாக, இரவு, 7:00 மணிக்கு மேல் வெளியே செல்ல, பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
6. தரமற்ற கால்வாய் பணி
கோவை மாநகராட்சி, 54வது வார்டு, வி.எல்.நகரில், தரமற்ற முறையில் வடிகால் அமைக்கும் பணிகள் நடக்கிறது. அடித்தளமின்றி, பக்கவாட்டு சுவர் மட்டும் கட்டப்பட்டது. பணிகள் முடியும் முன்பே, கால்வாய் சுவர்கள் பெயர்ந்து விழுந்துள்ளன.
7. உயரும் சாலை; தாழ்வாகும் வீடுகள்
என்.எஸ்.ஆர்.ரோட்டில் பழைய தார் சாலையை சரியாக தோண்டாமல், புதிய சாலை போடப்படுகிறது. இதனால், இணைப்பு சாலைகள் மற்றும் வீடுகள் தாழ்வாகி விடுகிறது. மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்குவற்கு வாய்ப்புள்ளது.
8. நடைபாதை ஆக்கிரமிப்பு
பூமார்க்கெட் பகுதியில் பாதசாரிகளுக்கான நடைபாதையை ஆக்கிரமித்து சிறிய, சிறிய கடைகளை அமைத்துள்ளனர். இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. கடைக்காரர்கள் வாகனங்களை நிறுத்த விடாமல் தடுக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருளால் பெருகும் குற்றம்
மதுக்கரை நகராட்சி, 13வது வார்டில், தண்டபாணி தோட்டம் பகுதியில், கடந்த பத்து நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இருள் காரணமாக குற்றச்சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. பலமுறை புகார் தெரிவித்தும், தெருவிளக்கு சரிசெய்யப்படவில்லை.
வேகத்தடை வேண்டும்
சவுரிபாளையம், உடையாம்பாளையம், அத்வைத் பள்ளி அருகே திருப்பத்தில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதிவேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தடுக்கவும் இப்பகுதியில், வேகத்தடை ஏற்படுத்த வேண்டும்.