/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்று நடக்கும் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் விசைத்தறியாளர்கள்இன்று நடக்கும் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் விசைத்தறியாளர்கள்
இன்று நடக்கும் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் விசைத்தறியாளர்கள்
இன்று நடக்கும் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் விசைத்தறியாளர்கள்
இன்று நடக்கும் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்குமா? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் விசைத்தறியாளர்கள்
ADDED : மார் 24, 2025 11:59 PM

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பிரதானமானது. 1.5 லட்சம் விசைத்தறிகளை நம்பி, நேரடியாகவும், மறைமுகமாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். 95 சதவீத விசைத்தறிகள், கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இந்த விசைத்தறிகள் வாயிலாக தினமும், ஒரு கோடி மீட்டர் காடா துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதிகாரிகள் முன்னிலையில், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில், விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்து வருவது வழக்கம்.
கடந்த, 10 ஆண்டுகளாக, கூலி உயர்வு ஒப்பந்தங்கள் முறையாக மேற்கொள்ளப்படாததால், விசைத்தறி யாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகினர். மின் கட்டண உயர்வு ஒரு பக்கம் அச்சுறுத்த, ஒப்பந்தப்படி கூலியை கொடுக்காமல், ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து வழங்கி வருவதால், விசைத்தறியாளர்கள் விரக்தி அடைந்தனர்.
புதிய கூலி உயர்வு கிடைத்தால் தான், தொழிலை நடத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். புதிய கூலி உயர்வு பெற்று தர கோரி, கடந்தாண்டு ஜன.,மாதம் இரு மாவட்ட கலெக்டர்களுக்கும் மனு அளித்தனர். தொடர்ந்து முதல்வர் தனிப்பிரிவு, அமைச்சர்கள், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம், 40 க்கும் மேற்ப்பட முறை மனு அளித்தனர். 15 மாதங்களில், 10 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் வேதனை அடைந்து, போராட்ட களத்தில் குதித்தனர்.
ஆர்ப்பாட்டம், கருப்பு கொடி ஏற்றுதல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்காததால், கடந்த, 19 ம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர். இதனால், துணி ரகங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வர்த்தகம் முடங்கியது. தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்தனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
தொடர்ந்து ஐந்து நாட்களாக வேலை நிறுத்தம் நடந்து வரும் நிலையில், இரு மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து, விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கடிதங்களை இரு தரப்பினரிடமும் வழங்கியுள்ளனர். இதனால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும், என, விசைத்தறியாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் சோமனூர் சங்க தலைவர் பூபதி கூறுகையில், காலவரையற்ற போராட்டத்தின் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கோவையில் கலெக்டர் முன்னிலையில், காலை, 11:00 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. சட்ட பாதுகாப்புடன் கூலி உயர்வுக்கான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளோம்,என்றார்.