/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வசதியானவர்கள் இனி நூறு நாள் திட்டத்தில் இணைய முடியாது வசதியானவர்கள் இனி நூறு நாள் திட்டத்தில் இணைய முடியாது
வசதியானவர்கள் இனி நூறு நாள் திட்டத்தில் இணைய முடியாது
வசதியானவர்கள் இனி நூறு நாள் திட்டத்தில் இணைய முடியாது
வசதியானவர்கள் இனி நூறு நாள் திட்டத்தில் இணைய முடியாது
ADDED : மார் 24, 2025 11:58 PM
பெ.நா.பாளையம்; 100 நாள் வேலை திட்டத்தில் வசதியானவர்கள் இணைவதை தடுக்க புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்ற நூறு நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் அதிக ஆர்வத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் பயனாளிகளுக்கு பெயர், முகவரி மற்றும் வேலை நாட்கள் அடங்கிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் சாலையோர முட்புதர்கள் அகற்றம், குளம், குட்டை தூர்வாரும் பணி, விவசாயம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தில் ஆண், பெண் சம ஊதியத்தில் பணி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நாள் ஒன்றுக்கு, 297 ரூபாய் கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், அவரவர் செய்கின்ற பணிக்கு ஏற்ற அளவீடு செய்து ஊதியம் வழங்கப்படுகிறது. பயனாளிகளுக்கு வங்கிகள் வாயிலாக பணம், பட்டுவாடா செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் அடையாள அட்டை புதுப்பிக்கும் பணி மார்ச் மாதத்தில் நடக்கும். வழக்கம் போல இந்த ஆண்டும், புதிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை, அந்தந்த பகுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,' புதிய அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பணிகள் வழங்குவதிலும், அளவீடுகள் செய்வதிலும், பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இது தவிர, ஆதார் எண்ணுடன், 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை இணைக்கப்படுகிறது. இதனால் வசதியான நபர்கள், இத்திட்டத்தில் இணைவது தடுக்கப்படும்' என்றனர்.