/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்வி 'பவர்' இருந்தும் புறக்கணிப்பது ஏன்? மின்வாரியத்துறையில் கேங்மேன்கள் கேள்வி கல்வி 'பவர்' இருந்தும் புறக்கணிப்பது ஏன்? மின்வாரியத்துறையில் கேங்மேன்கள் கேள்வி
கல்வி 'பவர்' இருந்தும் புறக்கணிப்பது ஏன்? மின்வாரியத்துறையில் கேங்மேன்கள் கேள்வி
கல்வி 'பவர்' இருந்தும் புறக்கணிப்பது ஏன்? மின்வாரியத்துறையில் கேங்மேன்கள் கேள்வி
கல்வி 'பவர்' இருந்தும் புறக்கணிப்பது ஏன்? மின்வாரியத்துறையில் கேங்மேன்கள் கேள்வி
ADDED : ஜூன் 25, 2025 11:16 PM
கோவை; தமிழ்நாடு மின்வாரியத்துறையில் உள்ள காலியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாநில மின்வாரியத்தலைவர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பு, கேங்மேன்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாநில மின்வாரியத்துறையின் கீழ், 9613 கேங்மேன்கள், 2021ல் பணிநியமனம் செய்யப்பட்டனர். 2023ம் ஆண்டு முதல் நிரந்தர பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
உரிய தகுதிகள் இருந்தும், பதவி உயர்வு இன்றி, ஐந்து ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில், இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில், பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக நிரப்பப்படும் என்ற அறிவிப்பு, கேங்மேன் வட்டாரங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் யுவராஜ் கூறியதாவது: மின்வாரியத்துறையில், 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அடிப்படை கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட சில பதவிகளில் மட்டும் 30 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன.
கேங்மேன் என்ற பணியிடத்தை கலைத்துவிட்டு, பதவி உயர்வு வழங்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால், தற்போது டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, 650 தொழில்நுட்ப உதவியாளர்கள், உதவி பொறியாளர், உதவி கணக்கு அதிகாரி, பிரிவுகளில் 416 இடங்கள், 850 கள உதவியாளர்கள் பணியிடம் நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக எடுப்பதால், அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும். ஆனால், உரிய அனுபவத்துடன், உரிய கல்வித்தகுதி, தொழில்நுட்ப தகுதியுடன் கேங்மேன்கள் பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர்.
இதனால், இப்பணியிடங்களை நிரப்புவதில், கேங்மேன்களுக்கு தகுதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.