/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பயனற்ற உரம் தயாரிப்பு மையம்; புதிய திட்ட பணிகளுக்கு உத்தரவு பயனற்ற உரம் தயாரிப்பு மையம்; புதிய திட்ட பணிகளுக்கு உத்தரவு
பயனற்ற உரம் தயாரிப்பு மையம்; புதிய திட்ட பணிகளுக்கு உத்தரவு
பயனற்ற உரம் தயாரிப்பு மையம்; புதிய திட்ட பணிகளுக்கு உத்தரவு
பயனற்ற உரம் தயாரிப்பு மையம்; புதிய திட்ட பணிகளுக்கு உத்தரவு
ADDED : ஜூன் 25, 2025 11:15 PM
கோவை; மாநகராட்சி மேற்கு மண்டலம், 38வது வார்டு, மருதமலை ரோடு, ஐ.ஓ.பி., காலனி, திரு.வி.க., நகரில் செயல்பாட்டில் இல்லாத நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நேற்று ஆய்வு செய்தார்.
இம்மையம் பயன்பாட்டில் இல்லாததால், புதிய திட்டப்பணிகள் மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தினார். ஐ.ஓ.பி., காலனியில் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தரைமட்ட பாலத்தினை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டார்.
இ.பி., காலனியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகளையும் விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தினார். அப்பகுதியில் செயல்பாட்டில் இல்லாத, மாநகராட்சி கட்டடத்தை புனரமைத்து புதிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்தும், அலுவலர்களுடன் ஆலோசித்தார்.