ADDED : செப் 29, 2025 12:46 AM

இ தய நோய் வருவதற்கான அதிக வாய்ப்புள்ளவர்கள் உலக சுகாதார கூற்றுப்படி, 45 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், மாதவிடாய் நிறைவு பெற்ற பெண்கள், புகை, மது பழக்கம் தொடர்ந்து உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள், குடும்பத்தில் பெற்றோருக்கு மாரடைப்பு வரலாறு உள்ளவர்கள். இதை தவிர, உடல் பருமன் உள்ள அனைவரும் முதல்கட்ட அபாய பட்டியலில் உள்ளவர்கள்.
இதய நோய் என்பது உடனடியாக உருவாவது இல்லை என்பதால், அபாய கட்டங்களில் உள்ளவர்கள் சரியான வாழ்க்கை முறைக்கு மாறுவதும், மருந்துகளை டாக்டர்கள் அறிவுரைப்படி பின்பற்றுவதும் மாரடைப்பில் இருந்து காப்பாற்றும்.


