Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி லோக்சபாவில் மும்முனை போட்டி வெல்லப்போவது யாரு?இன்று ஓட்டு எண்ணிக்கை நடப்பதால் பரபரப்பு

பொள்ளாச்சி லோக்சபாவில் மும்முனை போட்டி வெல்லப்போவது யாரு?இன்று ஓட்டு எண்ணிக்கை நடப்பதால் பரபரப்பு

பொள்ளாச்சி லோக்சபாவில் மும்முனை போட்டி வெல்லப்போவது யாரு?இன்று ஓட்டு எண்ணிக்கை நடப்பதால் பரபரப்பு

பொள்ளாச்சி லோக்சபாவில் மும்முனை போட்டி வெல்லப்போவது யாரு?இன்று ஓட்டு எண்ணிக்கை நடப்பதால் பரபரப்பு

ADDED : ஜூன் 03, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி;பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், யாருக்கு சாதகமாக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர் என்ற, திக்... திக்... மனநிலையோடு அரசியல் கட்சியினர் காத்திருக்கின்றனர்.இன்று ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரத்தில் முடிவு தெரிந்து விடும்.

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் கடந்த ஏப்., 19ம் தேதி நடந்தது. அதில், பொள்ளாச்சி தொகுதியில், மொத்தம் உள்ள, 15 லட்சத்து, 97ஆயிரத்து, 467 பேரில், 11 லட்சத்து, 24 ஆயிரத்து, 743 பேர் ஓட்டளித்தனர்; 70.41 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானது.

ஓட்டுப்பதிவுக்கு பின், லோக்சபா தொகுதியில் மொத்தம் உள்ள, 1,715 ஓட்டுச்சாவடி மையங்களில், பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு, ஓட்டு எண்ணும் மையமான பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், 'ஸ்ட்ராங்' அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. ஓட்டு எண்ணும் மையத்துக்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இதையடுத்து, முன்னேற்பாடுகள் குறித்து எஸ்.பி., பத்ரிநாராயணன் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு


பொள்ளாச்சி ஓட்டு எண்ணும் மையத்தில், எஸ்.பி., பத்ரி நாராயணன் தலைமையில், இரண்டு கூடுதல் எஸ்.பி., ஏழு டி.எஸ்.பி.,க்கள், 21 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட, 721 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், துணை ராணுவத்தினர், 30 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொகுதிக்கு 14 டேபிள்


அதிகாரிகள் கூறியதாவது:

ஓட்டு எண்ணும் மையத்தில், ஆறு சட்ட சபை தொகுதிக்கான ஓட்டு எண்ணும் அறையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப் படுகிறது. ஓட்டு எண்ணும் நாளன்று, ஓட்டு எண்ணும் அலுவலர்கள் காலை, 5:00 மணிக்கே மையத்துக்கு வர வேண்டும். காலை, 7:45 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேஜையில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.காலை, 7:55 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரின் தலைமையில் அனைவரும் ஓட்டுப்பதிவு ரகசியம் தொடர்பான உறுதிமொழி எடுக்க வேண்டும்.காலை, 8:00 மணிக்கு தபால் ஓட்டுகளும், 8:30 மணி முதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படும்.

ஒவ்வொரு தொகுதிக்கும், 14 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தொண்டாமுத்துார் தொகுதி - 23 சுற்றுகள், கிணத்துக்கடவு - 23, பொள்ளாச்சி - 20, வால்பாறை - 17, உடுமலை - 22, மடத்துக்குளம் - 21 என, மொத்தம், 126 சுற்று களாக ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன. தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு ஏழு டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மொபைலுக்கு தடை


ஒட்டு எண்ணும் மையத்தின் முகப்பு பகுதியில் சோதனை செய்த பின் அனைவரும் அனுமதிக்கப்படுவர்; ஓட்டு எண்ணும் மையத்துக்குள் மொபைல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் குலுக்கல் முறையில், ஒரு சட்டசபை தொகுதிக்கு, ஐந்து பூத் வீதம், 'விவி பேட்' சீட்டுகள் எண்ணப்படும். ஓட்டு எண்ணும் பணிக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இவ்வாறு, கூறினர்.

அரசியல் கட்சியினர் திக்... திக்...!

பொள்ளாச்சி தொகுதி, ரிசல்ட்டை பொறுத்தே தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் இருக்கும் என்ற நம்பிக்கை அரசியல் கட்சியினரிடம் நிலவுகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு பெண்களுக்கு இணையாக ஆண்களும் இம்முறை ஆர்வமாக ஓட்டு அளித்துள்ளனர்.ஆண்கள், 71.16 சதவீதமும் (5,50,379 ஓட்டுகள்), பெண்கள், 69.72 சதவீதமும் (5,74,275 ஓட்டுகள்) பதிவாகியுள்ளது.கடந்தாண்டுகளை விட, இந்தாண்டு அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., என மும்முனை போட்டி நிலவுகிறது. பலத்த போட்டி நிலவுவதால், அரசியல் கட்சியினர் யார் வெற்றி பெறுவர் என கணிக்க முடியாத சூழல் உள்ளது.கட்சிகள் போட்டி போட்டு பிரசாரம் செய்ததோடு மட்டுமல்லாமல், பணத்தையும் வாரி இறைத்துள்ளனர். இம்முறை யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இன்று, 'ரிசல்ட்' வர உள்ளதால், கட்சியினர் திக்... திக்... மனநிலையில் உள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us