/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பிங்க்' பஸ்சில் இலவச டிக்கெட் கேட்டு வாங்குங்க! இல்லைனா கண்டக்டருக்கு தான் சிக்கல் 'பிங்க்' பஸ்சில் இலவச டிக்கெட் கேட்டு வாங்குங்க! இல்லைனா கண்டக்டருக்கு தான் சிக்கல்
'பிங்க்' பஸ்சில் இலவச டிக்கெட் கேட்டு வாங்குங்க! இல்லைனா கண்டக்டருக்கு தான் சிக்கல்
'பிங்க்' பஸ்சில் இலவச டிக்கெட் கேட்டு வாங்குங்க! இல்லைனா கண்டக்டருக்கு தான் சிக்கல்
'பிங்க்' பஸ்சில் இலவச டிக்கெட் கேட்டு வாங்குங்க! இல்லைனா கண்டக்டருக்கு தான் சிக்கல்
ADDED : ஜூன் 03, 2024 11:51 PM
பொள்ளாச்சி:'பிங்க்' நிற பஸ்களில் பெண் பயணியர், அலட்சியப் போக்குடன் செயல்படாமல் கட்டாயம் 'கட்டணமில்லா பயணச்சீட்டு' வாங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த 2021-ம் ஆண்டு முதல், டவுன் பஸ்களில், பெண்கள் இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், 'ஒயிட் போர்டு' எனப்படும் சாதாரண பஸ்களில் பெண்களின் இலவசமாக பயணம் தொடர்ந்தது.
ஆனால், 'ஒயிட் போர்டு' பஸ்களை பெண்கள் கண்டறிவதில் சிரமம் இருந்ததால் அந்த பஸ்களின் முன்புறமும், பின்புறமும் 'பிங்க்' வர்ணம் அடிக்கப்பட்டது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கும் இந்த 'பிங்க்' நிற பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில், இந்த பஸ்களில், பெண்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
அதேநேரம், பஸ்களில் எத்தனை பெண்கள் பயணம் செய்கிறார்கள் என்பதை, இலவச டிக்கெட் வாயிலாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, கண்டக்டர் வாயிலாக பெண் பயணியருக்கு, 'கட்டணமில்லா பயணச்சீட்டு' வழங்கப்படுகிறது.
ஆனால், கூட்ட நெரிசலிலும், 'மொபைல்போன்' சகிதமாக இருக்கும் சிலர், இலவச பயணத்துக்கான சீட்டு வாங்காமல், அலட்சியத்துடன் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதனால், கண்டக்டர்கள் பலரும் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி கோட்டத்தில், 80க்கும் மேற்பட்ட 'பிங்க்' நிற பஸ்களில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். அவர்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்க வேண்டும். எத்தனை பேர் கட்டணமின்றி பயணம் செய்கின்றனர் என்கிற கணக்குக்காக இது தேவைப்படுகிறது.
குறிப்பாக, கட்டணமில்லா பயணச்சீட்டு ஒன்றுக்கு, 12 ரூபாய் நிர்ணயித்து, அரசு வாயிலாக, போக்குவரத்து கழகத்துக்கு செலுத்தப்படுகிறது. இதற்காகவே, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யக் கூடாது என, கண்டக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பெண்கள், இத்தகைய டிக்கெட்டை வாங்க தவிர்த்து விட்டால், பரிசோதகர் ஆய்வில், அபராதம் விதிக்கும் சூழல் இருந்தாலும், கண்டக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
இவ்வாறு, கூறினர்.