/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புற்றுநோய் கண்டறியும் முகாம் எப்போது ? புற்றுநோய் கண்டறியும் முகாம் எப்போது ?
புற்றுநோய் கண்டறியும் முகாம் எப்போது ?
புற்றுநோய் கண்டறியும் முகாம் எப்போது ?
புற்றுநோய் கண்டறியும் முகாம் எப்போது ?
ADDED : ஜூன் 06, 2025 05:47 AM
அன்னுார்; தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில், 38 மாவட்டங்களிலும் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்கத் திட்டம் அமுல்படுத்தப்படும் என அரசு கடந்த மாதம் அறிவித்தது. கோவை மாவட்டத்தில் மே 9ம் தேதி துவங்கி 45 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகமும் சுகாதார துறையும் தெரிவித்தன.
இத்திட்டத்தில் வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகிய மூன்று புற்று நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிய பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும் அரசு அறிவித்து 25 நாட்கள் ஆகியும் இதுவரை அன்னுார் வட்டாரத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை எதிலும் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெறவில்லை. வழக்கம் போல் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது
அரசின் அறிவிப்பை அன்னுார் வட்டாரத்தில் விரைவில் அமுல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.