/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஊராட்சிகளில் மரக்கன்று நடும் பணி தீவிரம் ஊராட்சிகளில் மரக்கன்று நடும் பணி தீவிரம்
ஊராட்சிகளில் மரக்கன்று நடும் பணி தீவிரம்
ஊராட்சிகளில் மரக்கன்று நடும் பணி தீவிரம்
ஊராட்சிகளில் மரக்கன்று நடும் பணி தீவிரம்

அன்னுார்
சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி, கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு மற்றும் இந்தியன் பப்ளிக் பள்ளி இணைந்து தேவம்பாளையம் தடுப்பணையை ஒட்டிய பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
கருமத்தம்பட்டி
கிட்டாம்பாளையத்தில் உள்ள அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் பவன்குமார், மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் சந்திரசேகருக்கும், ஊராட்சி நிர்வாகத்துக்கும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.
பெ.நா.பாளையம்
பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள அக்சரம் சர்வதேச பள்ளி சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி, மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இப்பள்ளியைச் சேர்ந்த ஆறு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் உலக சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கருத்துக்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி, பள்ளியை சுற்றி உள்ள குடியிருப்புகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். குடியிருப்புகளுக்கு சென்று மரக்கன்றுகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அக்சரம் சர்வதேச பள்ளி முதல்வர் பாப்பிராய் தலைமையில் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.