/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மக்கள் புகார் தெரிவிக்க வசதியாக 'வாட்ஸ்ஆப்' எண்கள் அறிவிப்பு மக்கள் புகார் தெரிவிக்க வசதியாக 'வாட்ஸ்ஆப்' எண்கள் அறிவிப்பு
மக்கள் புகார் தெரிவிக்க வசதியாக 'வாட்ஸ்ஆப்' எண்கள் அறிவிப்பு
மக்கள் புகார் தெரிவிக்க வசதியாக 'வாட்ஸ்ஆப்' எண்கள் அறிவிப்பு
மக்கள் புகார் தெரிவிக்க வசதியாக 'வாட்ஸ்ஆப்' எண்கள் அறிவிப்பு
ADDED : ஜூன் 13, 2025 09:40 PM

பொள்ளாச்சி; கோவை மாவட்டத்தில், கிராம ஊராட்சிகளில், அடிப்படை பிரச்னைகள் குறித்து புகார்களை தெரிவிக்க, ஒன்றியம் வாயிலாக 'வாட்ஸ்ஆப்' எண் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு பழுது மற்றும் குப்பை அகற்றவில்லை என, அடிப்படை பிரச்னைகள் அதிகம் உள்ளன. இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.
இந்நிலையில், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில், 12 ஒன்றியங்களுக்கும் ஒன்றிய அளவில் புகார் தெரிவிக்கும் வகையில், 'வாட்ஸ்ஆப்' எண்களும் வழங்கப்பட்டுள்ளன. அதில், ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள பிரச்னைகளை தெரிவிக்க, 74029 05234, தெற்கு ஒன்றியம் - 73975 81943, வடக்கு ஒன்றியம் - 74029 05266, கிணத்துக்கடவு ஒன்றியம் - 87786 85349 என்ற எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 'வாட்ஸ்ஆப்' எண்களுக்கு மக்கள், புகைப்படத்துடன் புகார் தெரிவித்தால், மூன்று நாட்களுக்குள் புகார்கள் நிவர்த்தி செய்யப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சமூக வலைதளங்களில், மாவட்ட நிர்வாகம் வாயிலாக தகவல்கள் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது, என, அதிகாரிகள் தெரிவித்தனர்.