/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காலத்தில் பயிர் செய்ய விவசாயி ஆலோசனை காலத்தில் பயிர் செய்ய விவசாயி ஆலோசனை
காலத்தில் பயிர் செய்ய விவசாயி ஆலோசனை
காலத்தில் பயிர் செய்ய விவசாயி ஆலோசனை
காலத்தில் பயிர் செய்ய விவசாயி ஆலோசனை
ADDED : ஜூன் 13, 2025 09:40 PM
கிணத்துக்கடவு; காலத்திற்கு ஏற்ப பயிர் செய்வதும், அதிக விலைக்கு விற்பது குறித்தும் இயற்கை விவசாயி ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிணத்துக்கடவு மற்றும் நெகமம் சுற்றுவட்டார பகுதியில், பெரும்பாலான விவசாயிகள் ஒரே பயிரை பயிரிட்டு வருகின்றனர். இதில், ஒரு சிலருக்கு லாபம் கிடைத்தாலும், பலருக்கு கொள்முதல் செய்த தொகையும், சிலருக்கு நஷ்டமும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க இயற்கை விவசாயி சம்பத்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர், கூறுகையில், 'பயிர் விளைச்சல் மற்றும் விலை குறித்த தகவல், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணையதள பக்கத்தில் உள்ளது. இதில், கடந்த 5 ஆண்டுகளில் எந்த பயிர் என்ன விலைக்கு விற்பனையாகியுள்ளது என்ற தகவல் பட்டியலிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் இதை கவனித்து, அதற்கேற்றார் போல், காலத்துக்கு ஏற்ற பயிர் சாகுபடி செய்ய வேண்டும். இதனால் விவசாயிகள் அதிக லாபம் பெற வாய்ப்புள்ளது,' என்றார்.