/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வீடு கட்ட துவங்கும் முன் எந்தெந்த விஷயத்தில் 'அலர்ட்' ஆக இருக்கணும்?வீடு கட்ட துவங்கும் முன் எந்தெந்த விஷயத்தில் 'அலர்ட்' ஆக இருக்கணும்?
வீடு கட்ட துவங்கும் முன் எந்தெந்த விஷயத்தில் 'அலர்ட்' ஆக இருக்கணும்?
வீடு கட்ட துவங்கும் முன் எந்தெந்த விஷயத்தில் 'அலர்ட்' ஆக இருக்கணும்?
வீடு கட்ட துவங்கும் முன் எந்தெந்த விஷயத்தில் 'அலர்ட்' ஆக இருக்கணும்?

அஸ்திவாரம் எழுப்பி வீடு கட்டுவது, துாண்கள் எழுப்பி வீடு கட்டுவது ஆகியவற்றில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் என்னென்ன?
அஸ்திவாரம் போட்டு வீடு கட்டுவதை, 'லோடு பேரிங் ஸ்ட்ரக்சர்' என்று ஆங்கிலத்தில் கூறுவர். இந்த முறையில் வீட்டின் மொத்த எடை (dead load + live load) சுவரின் வழியாக மட்டுமே அஸ்திவாரத்தை (foundation) சென்றடையும்.
சாதக அம்சங்கள்
இதில், செங்கல் அல்லது கருங்கல் மட்டும் பயன்படுத்தி சுவர் எழுப்பி வீடு கட்டுவதால், துாண், அதற்கு உபயோகப்படுத்தப்படும் கான்கிரீட் மற்றும் கம்பிகள் தேவையில்லை. இதனால் வீட்டின் செலவு குறையும். இந்த முறையில் வீடு கட்டுவதால், Formed structure ஐ விட குறைவான காலத்தில், வீடு கட்டி முடிக்க முடியும்.
பாதக அம்சங்கள்
1. இதில் சுவர் மூலம் மொத்த எடையும் தரைக்கு செல்வதால், கீழ் தளத்தில் எந்த இடத்தில் சுவர் இருக்கிறதோ, மேல் தளத்தில் அதே இடத்தில் சுவர் எழுப்ப வேண்டும். சுவரை (அறையை) மாற்றி அமைக்க முடியாது.
2. புதிதாக வீடு கட்ட எண்ணியிருக்கிறேன். என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் ?
வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பே, கட்டட பிளான் மற்றும் பட்ஜெட் இறுதி செய்து கொள்ள வேண்டும். ஹாலின் அளவு முடிந்தளவு பெரிதாக வைத்துக் கொள்ள வேண்டும். டைனிங் ஹால் இடமிருந்தால் தனியாக வையுங்கள். இடம் இல்லாவிட்டால், ஹாலில் அதற்கு போதிய இடம் ஒதுக்க வேண்டும். சமையல் மேடை மற்றும் பொருட்கள் வைக்கும் இடம் ஆகியவற்றுக்கு சரியாக திட்டமிட வேண்டும்.