Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோலக்ஸ் யானை இதயத்தில் ரத்தம் தேங்க காரணம் என்ன?

 ரோலக்ஸ் யானை இதயத்தில் ரத்தம் தேங்க காரணம் என்ன?

 ரோலக்ஸ் யானை இதயத்தில் ரத்தம் தேங்க காரணம் என்ன?

 ரோலக்ஸ் யானை இதயத்தில் ரத்தம் தேங்க காரணம் என்ன?

ADDED : டிச 01, 2025 01:59 AM


Google News
கோவை: ரோலக்ஸ் யானை உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய, மூன்று ஆய்வகங்களுக்கு உடற்பாக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கோவை, தொண்டாமுத்துார் சுற்றுவட்டார பகுதிகளில், சுற்றித்திரிந்த 'ரோலக்ஸ்' என பெயரிடப்பட்ட காட்டு யானையை, வனத்துறையினர் பிடித்து வரகலியாறு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, ரேடியோ காலர் பொருத்தி வனத்தில் விட்டனர். இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், முந்திரிமட்டம் பகுதியில் யானை உயிரிழந்தது. பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் யானைக்கு, 50 வயது என்பதும், இருதயம் மற்றும் பெரிகார்டியம் பகுதியில், இரண்டு லிட்டர் ரத்தம் தேங்கியதால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரிந்தது.

ரத்தம் தேங்கியதன் காரணம் கண்டறிய, அதன் உடற்பாகங்கள் கேரள மாநிலம் வயநாடு, உ.பி., பார்லேவில் உள்ளிட்ட மூன்று ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் வந்த பின், மரணத்துக்கான உறுதியான காரணம் தெரியவரும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us