/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கொடிசியாவில் நேற்றும், இன்றும் கல்யாணம்... ஆகாகா கல்யாணம்!கொடிசியாவில் நேற்றும், இன்றும் கல்யாணம்... ஆகாகா கல்யாணம்!
கொடிசியாவில் நேற்றும், இன்றும் கல்யாணம்... ஆகாகா கல்யாணம்!
கொடிசியாவில் நேற்றும், இன்றும் கல்யாணம்... ஆகாகா கல்யாணம்!
கொடிசியாவில் நேற்றும், இன்றும் கல்யாணம்... ஆகாகா கல்யாணம்!
ADDED : ஜன 27, 2024 11:16 PM

ஒரு மனிதனின் வாழ்க்கையில் திருமணம் என்ற பந்தம், உருவான பின்புதான் அவரது வாழ்வில் வசந்த காலம் மலர்கிறது.
கணவன் - மனைவி என்ற புனிதமான உறவை, உருவாக்கி கொடுக்கும் வாய்ப்பை, 'கல்யாண மாலை' ஏற்படுத்தி தருகிறது.
கோவை கொடிசியா வளாகத்தில் கல்யாண மாலை சார்பில், 'வெட்டிங் அண்ட் பியாண்ட்' என்ற திருமண திருவிழா நேற்று துவங்கியது.
இந்த கண்காட்சிக்கு, பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் வரன் தேடி வந்திருந்தனர். இணை தேடும் இளையவர்கள் கண்களில் எதிர் காலக்கனவுகளும், எதிர்பார்ப்புகளும் நிறைந்திருப்பதை பார்க்க முடிந்தது.
சமூகம் வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டு, சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன் வந்திருந்து, வரன் தேடும் நிகழ்வில் பங்கேற்று கலந்துரையாடினர்.
இந்த கண்காட்சியில், 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. திருமணம் போன்ற வீட்டு விசேஷங்களுக்கு தேவைப்படும் பர்னிச்சர், பிரிஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், தங்க நகைகள், ஆடைகள், ஆபரணங்கள் ஏராளமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பல ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட்டு, பொருட்களை வாங்கிச் சென்றனர்.
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தலைமையில், இளம் பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. காலை 9:00 மணிக்கு துவங்கி, இரவு 8:00 மணி வரை நடக்கும் இந்த கண்காட்சி, இன்றுடன் நிறைவு பெறுகிறது.