/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஓட்டு விற்பனைக்கு அல்ல: மாணவர்கள் உறுதியேற்புஓட்டு விற்பனைக்கு அல்ல: மாணவர்கள் உறுதியேற்பு
ஓட்டு விற்பனைக்கு அல்ல: மாணவர்கள் உறுதியேற்பு
ஓட்டு விற்பனைக்கு அல்ல: மாணவர்கள் உறுதியேற்பு
ஓட்டு விற்பனைக்கு அல்ல: மாணவர்கள் உறுதியேற்பு
ADDED : ஜன 24, 2024 11:59 PM

அரசு பள்ளியில் நடந்த தேசிய வாக்காளர் தின விழாவில், 'ஓட்டுக்களை பணத்திற்காக விற்பனை செய்யக்கூடாது,' என, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் நடந்தது.
ஓட்டுச்சாவடி நிலைய மேற்பார்வையாளர் இளங்கோ பேசியதாவது:
லோக்சபா தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
வாக்காளர்கள் எந்த சூழ்நிலையிலும், தங்களது ஓட்டுக்களை பணத்திற்காக விற்பனை செய்யக்கூடாது. தேர்தலின் போது வாக்காளர்கள்சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். வாக்காளர் பட்டியிலில் பெயர் உள்ளதாக என்பதை அருகில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இளைஞர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் விதமாக, தேர்தல் நாளில் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, பேசினார்.
உடுமலை
தேர்தல் கமிஷன் சார்பில், உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரியில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது. உடுமலை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் விவேகானந்தன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சையது ராபியம்மாள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட வழிமுறைகள் மற்றும் தேர்தலில் வாக்களிப்பது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவியர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
- நிருபர் குழு -