/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிரதமர் மோடி பிறந்தநாள்; தொண்டர்கள் ரத்த தானம் பிரதமர் மோடி பிறந்தநாள்; தொண்டர்கள் ரத்த தானம்
பிரதமர் மோடி பிறந்தநாள்; தொண்டர்கள் ரத்த தானம்
பிரதமர் மோடி பிறந்தநாள்; தொண்டர்கள் ரத்த தானம்
பிரதமர் மோடி பிறந்தநாள்; தொண்டர்கள் ரத்த தானம்
ADDED : செப் 21, 2025 11:15 PM

மேட்டுப்பாளையம்; பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் பா.ஜ., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை, மேட்டுப்பாளையம் நகர பா.ஜ.,வினர் ஒரு வாரம் கொண்டாட முடிவு செய்துள்ளனர். முதல் நாள் மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இரண்டாவது நிகழ்ச்சியாக ரத்ததான முகாமை நடத்தினர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நடந்த ரத்த தான முகாமுக்கு, பா.ஜ., நகர தலைவர் சரவணகுமார் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் கார்த்திக் மகராஜ் முகாமை தொடக்கி வைத்தார்.
ரத்த வங்கி டாக்டர்கள் ராம்தீபிகா, சுஷ்மிதா மற்றும் மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர் சதீஷ்குமார், ஆர்.எஸ்.எஸ்.ஓ., நிர்வாகி ஆனந்த், முன்னாள் மாவட்ட செயலாளர் சாந்தி, உள்பட, மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.