/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திணறுகிறது வ.உ.சி., பூங்கா ரவுண்டானா சாலை; மாற்று ஏற்பாடு செய்யுமா போக்குவரத்துத்துறை திணறுகிறது வ.உ.சி., பூங்கா ரவுண்டானா சாலை; மாற்று ஏற்பாடு செய்யுமா போக்குவரத்துத்துறை
திணறுகிறது வ.உ.சி., பூங்கா ரவுண்டானா சாலை; மாற்று ஏற்பாடு செய்யுமா போக்குவரத்துத்துறை
திணறுகிறது வ.உ.சி., பூங்கா ரவுண்டானா சாலை; மாற்று ஏற்பாடு செய்யுமா போக்குவரத்துத்துறை
திணறுகிறது வ.உ.சி., பூங்கா ரவுண்டானா சாலை; மாற்று ஏற்பாடு செய்யுமா போக்குவரத்துத்துறை
ADDED : ஜூன் 11, 2025 09:49 PM

கோவை; வ.உ.சி.பூங்கா ரவுண்டானாவை, போக்குவரத்துத்துறையினர் ஆய்வுப்பணிக்கு பயன்படுத்துவதால் அன்றாடம் காலை நேரங்களில், வாகன நெரிசல் ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட வாகன ஆய்வு, வாகனப்பதிவு, எப்.சி.புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள், வ.உ.சி., பூங்கா மைதானத்திலேயே, அன்றாடம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வரும் வாகனங்களால், வ.உ.சி.,பூங்கா ரவுண்டானாவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாகின்றனர்.
இது குறித்து, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன் கூறியதாவது:
கோவை வ.உ.சி.,பூங்கா மைதானத்தில், அரசு பொருட்காட்சி நடந்து வருவதால் அங்குள்ள மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த ரவுண்டானா பகுதியை பயன்படுத்தி வருகிறோம்.
நெரிசல் ஏற்படாமல் இருக்க, வாகனங்கள் வந்து செல்லும் நேரத்தை மாற்றி அமைத்துக்கொள்கிறோம். நிரந்தரமாக பிரச்னை ஏற்படாமல் இருக்க, மாற்று ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.