/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விளாமரத்தூர் குடிநீர் திட்டம் மூன்று மாதத்தில் நிறைவு பெறும் விளாமரத்தூர் குடிநீர் திட்டம் மூன்று மாதத்தில் நிறைவு பெறும்
விளாமரத்தூர் குடிநீர் திட்டம் மூன்று மாதத்தில் நிறைவு பெறும்
விளாமரத்தூர் குடிநீர் திட்டம் மூன்று மாதத்தில் நிறைவு பெறும்
விளாமரத்தூர் குடிநீர் திட்டம் மூன்று மாதத்தில் நிறைவு பெறும்
ADDED : ஜூன் 06, 2025 05:48 AM

மேட்டுப்பாளையம்; 'விளாமரத்தூர் குடிநீர் திட்டம், இன்னும் மூன்று மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும்' என, நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், 8.63 கோடி ரூபாய் செலவில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள், விளாமரத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, 22.20 கோடி ரூபாய் செலவில் குடிநீர் விரிவாக்க திட்ட பணிகள் நடைபெறுகின்றன.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை நகராட்சி கமிஷனர் அமுதா, நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன், துணைத் தலைவர் அருள் வடிவு மற்றும் கவுன்சிலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த ஆண்டு இறுதிக்குள், பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் நிறைவடையும். நகராட்சியின் குடிநீர் விரிவாக்கத் திட்டம் நெல்லித்துறை ஊராட்சி விளாமரத்தூரில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. விளாமரத்தூர் பகுதி மக்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
நிதி கிடைத்தவுடன் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். குடிநீர் திட்டப் பணிகள் அனைத்தும், மூன்று மாதத்திற்குள் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.
நகர மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். இதனால் கூட்டம் நடத்துவது தள்ளி செல்கிறது.
இனிவரும் காலங்களில் முறையாக கூட்டம் நடைபெறும். இவ்வாறு நகர மன்ற தலைவர் கூறினார்.