/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வேல் யாத்திரை நடத்த முடிவு முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வேல் யாத்திரை நடத்த முடிவு
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வேல் யாத்திரை நடத்த முடிவு
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வேல் யாத்திரை நடத்த முடிவு
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வேல் யாத்திரை நடத்த முடிவு
ADDED : ஜூன் 06, 2025 05:48 AM

அன்னுார்; அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், வேல் யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
'திருப்பரங்குன்றம் காக்க, அணி திரள்வோம்,' என்னும் கோஷத்தோடு பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து வருகிற ஜூன் 22ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகின்றன.
அன்னுார் ஒன்றியத்தில் இந்த மாநாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநாட்டுக்கு அதிக அளவில் செல்லவும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். கூட்டத்தில் 21 ஊராட்சிகளிலும் மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேல் யாத்திரை நடத்தப்படும். முக்கியமான கோவில் முன்புறம் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வேல் பொருத்தப்பட்டிருக்கும். பக்தர்கள் அந்த வேலுக்கு வழிபாடு நடத்தலாம். முருக பக்தர்கள் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.
முக்கியமான இடங்களில் யாத்திரை நடைபெறும். ஜூன் 20ம் தேதி யாத்திரை நிறைவு பெறும். யாத்திரை துவக்க நிகழ்ச்சியிலும் அதன் பிறகு ஐந்து இடங்களிலும் மாநில அளவிலான நிர்வாகிகள் பங்கேற்பார்கள். 22ம் தேதி அன்னுார் ஒன்றியத்திலிருந்து அதிக அளவில் பங்கேற்பது, என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் கணேசமூர்த்தி, ஆனந்தன், பார்வையாளர்கள் ராஜராஜசாமி, ரத்தினசாமி, மாவட்ட நிர்வாகிகள் சிவக்குமார், தர்மலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.