/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வி.ஜி. கல்லுாரிகள் விளையாட்டு விழாவி.ஜி. கல்லுாரிகள் விளையாட்டு விழா
வி.ஜி. கல்லுாரிகள் விளையாட்டு விழா
வி.ஜி. கல்லுாரிகள் விளையாட்டு விழா
வி.ஜி. கல்லுாரிகள் விளையாட்டு விழா
ADDED : ஜன 08, 2024 01:40 AM
கோவை;கோவை மேட்டுப்பாளையம் ரோடு துடியலுாரில் உள்ள, வி.ஜி.பாராமெடிக்கல் கல்லுாரி மற்றும் நர்சிங் கல்லுாரியில், 2023-24ம் ஆண்டுக்கான விளையாட்டு விழா நடந்தது.
மாணவர்கள், பல்வேறு உள் அரங்கு மற்றும் வெளி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவை முன்னிட்டு, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன், மகரிஷி வித்யா மந்திர் தாளாளர் தர்மா சுப்ரமணியன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
முன்னதாக விழாவில், வி.ஜி. மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ், அறங்காவலர் ஆஷா வெங்கடேஷ், நர்சிங் கல்லுாரி முதல்வர் ருக்மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.