/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா துவக்கம் மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா துவக்கம்
மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா துவக்கம்
மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா துவக்கம்
மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா துவக்கம்
ADDED : மே 21, 2025 11:27 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் மைக்கண் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழா பூச்சாட்டுடன் துவங்கியது.
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை, பழைய சந்தைக் கடையில், மைக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசித் திருவிழா, நேற்று முன்தினம் இரவு (20ம் தேதி) பூச்சாட்டுடன் துவங்கியது.
ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. வருகிற, 27ம் தேதி அக்னி கம்பம் நடுதலும், ஜூன் 3ம் தேதி பவானி ஆற்றின் அருகே உள்ள, சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இருந்து, அம்மன் அழைப்பும், 4ம் தேதி பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தலும், முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற உள்ளது.
ஐந்தாம் தேதி இரவு அம்மன் திருவீதி உலாவும், ஆறாம் தேதி மஞ்சள் நீராட்டு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வனிதா, அறங்காவலர் குழு தலைவர் சிவமூர்த்தி, அறங்காவலர்கள் சக்திவேல், பத்மாவதி மற்றும் திருவிழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.