/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தலைமையாசிரியர் பணியிடம் காலி; அரசு பள்ளிகளில் கற்பித்தல் பாதிப்பு தலைமையாசிரியர் பணியிடம் காலி; அரசு பள்ளிகளில் கற்பித்தல் பாதிப்பு
தலைமையாசிரியர் பணியிடம் காலி; அரசு பள்ளிகளில் கற்பித்தல் பாதிப்பு
தலைமையாசிரியர் பணியிடம் காலி; அரசு பள்ளிகளில் கற்பித்தல் பாதிப்பு
தலைமையாசிரியர் பணியிடம் காலி; அரசு பள்ளிகளில் கற்பித்தல் பாதிப்பு
ADDED : ஜூன் 11, 2025 09:08 PM
அன்னுார்; மூன்று ஆண்டுகளாக தலைமையாசிரியர் இல்லாமல், 18 அரசு பள்ளிகளில் கற்பித்தல் பாதிக்கப்பட்டுள்ளது.
அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 75 துவக்க, 16 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 6,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இதில் செல்லப்பம்பாளையம், வடக்கலூர், கணுவக்கரை, பிள்ளையப்பம்பாளையம் உள்ளிட்ட பத்து நடுநிலைப்பள்ளிகளிலும், 8 துவக்க பள்ளிகளிலும் பல ஆண்டுகளாக தலைமையாசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளது.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது : வசதி குறைவான ஏழை எளிய மக்கள் தான் அதிக அளவில் அரசு பள்ளிக்கு வருகின்றனர். புத்தகம், நோட்டு, எழுதுபொருட்கள், புத்தகப்பை, காலணி, என 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. காலை சிற்றுண்டி மற்றும் முட்டையுடன் மதியம் சத்துணவும் வழங்கப்படுகிறது.
எனினும், 18 பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாகவே காலியாக உள்ளது. இதனால் தலைமையாசிரியர் பணியை மற்றொரு ஆசிரியர் கூடுதலாக கவனிக்க வேண்டிய உள்ளது. இதனால் கற்பித்தல் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே எமிஸ் பதிவேற்றம் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் கல்வி அலுவலருக்கு தர வேண்டி உள்ளது.
14 வகையான இலவச பொருட்களையும் பதிவு செய்து மாணவர்களுக்கு விநியோகித்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. கற்பித்தல் இல்லாமல் பல்வேறு பணிகள் உள்ளன. இந்நிலையில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கற்பித்தல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு உடனடியாக துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு பெற்றோர் தெரிவித்தனர்.