/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விவசாயிகள் எதிர்ப்பால் நில எடுப்பு பாதியில் நிறுத்தம்; திரும்பி சென்ற அதிகாரிகள் விவசாயிகள் எதிர்ப்பால் நில எடுப்பு பாதியில் நிறுத்தம்; திரும்பி சென்ற அதிகாரிகள்
விவசாயிகள் எதிர்ப்பால் நில எடுப்பு பாதியில் நிறுத்தம்; திரும்பி சென்ற அதிகாரிகள்
விவசாயிகள் எதிர்ப்பால் நில எடுப்பு பாதியில் நிறுத்தம்; திரும்பி சென்ற அதிகாரிகள்
விவசாயிகள் எதிர்ப்பால் நில எடுப்பு பாதியில் நிறுத்தம்; திரும்பி சென்ற அதிகாரிகள்
ADDED : ஜூன் 11, 2025 09:08 PM
அன்னுார்; புறவழிச் சாலைக்கு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகள், விவசாயிகள் எதிர்ப்பால் திரும்பிச் சென்றனர்.
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதற்கு தீர்வாக, குரும்பபாளையத்தில் துவங்கி, அன்னுார், புளியம்பட்டி, சத்தி வழியாக, கர்நாடக எல்லை வரை, 1912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமைவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் கருத்து கேற்பு கூட்டம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக நில அளவீடு செய்து கல் நடும்பணி துவங்கியுள்ளது.
அன்னுார் அருகே காரப்பாடி ஊராட்சி, செல்லப்பம்பாளையத்தில் நில எடுப்பு தாசில்தார் முருகேசன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று முன்தினம் வந்தனர். புறவழிச்சாலைக்காக நில அளவீடு செய்து கல்நட முயன்றனர். உடனே அங்கு விவசாயிகள் திரண்டனர்.
'எங்கள் தோட்டத்திற்குள் வந்து அளவீடு செய்ய, கல் நட எங்களுக்கு நோட்டீஸ் எதுவும் தரப்படவில்லை. எங்களிடம் அனுமதி பெறவில்லை. அனுமதியில்லாமல் எங்கள் நிலத்திற்குள் வந்து அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டோம்,' என்றனர்
உங்களது எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக தாருங்கள் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
இதை அடுத்து அப்பகுதி விவசாயி,' எனது தோட்டத்தில் நில அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறேன். உரிய நோட்டீஸ் தரப்பட்டு, கால அவகாசம் அளித்த பின்பே அளவீடு செய்ய வேண்டும்,' என எழுத்துப்பூர்வமாக எழுதி அதிகாரிகளிடம் தந்தார்.
இதையடுத்து நில எடுப்பு அலுவலர்கள் நில அளவீடு செய்யும் பணியை பாதியில் நிறுத்திவிட்டு திரும்பிச் சென்றனர்.