/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேற்கொள்ளப்படும் பணிகள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளப்படும் பணிகள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம்
மேற்கொள்ளப்படும் பணிகள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம்
மேற்கொள்ளப்படும் பணிகள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம்
மேற்கொள்ளப்படும் பணிகள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம்
ADDED : ஜூன் 16, 2025 08:19 PM
பொள்ளாச்சி; பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு பணிகள் விபரம், உரிய போட்டோவுடன் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக நிதி பெறப்பட்டு, கழிவறை கட்டுதல், குடிநீர் குழாய் சீரமைத்தல், வகுப்பறை மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதுதவிர, சில பள்ளிகளில், தன்னார்வ அமைப்பு வாயிலாக ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் போர்டு வசதியும் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வகையில், சில மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்பு பணி விபரங்களை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்து, உரிய நிதி கோரப்பட்டு வருகிறது.
பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பள்ளி உள்கட்டமைப்பு பணிகளை பொறுத்த வரையில், பொதுப்பணித்துறையின் கட்டுமான விதிமுறைகள் மற்றும் தர நிர்ணயங்கள் பின்பற்றப்படுகிறது.
தேவைப்படும் கட்டமைப்பு பணிகள் மட்டுமின்றி, முதன்மைக் கல்வி அலுவலகம் வாயிலாக பெறப்படும் நிதியைக் கொண்டு மேற்கொள்ளப்படும் பணி விபரங்களும், உரிய போட்டோவுடன் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதன் பின், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.