ADDED : ஜூன் 16, 2025 05:24 AM

கோவை: ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் இருந்து நேற்று மதியம், 'இண்டிகோ' விமானம் கோவை வந்தது. பயணியரின் உடமைகளை, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் சோதனை செய்த போது, பயணி ஒருவரின் ஷூவில், 22 மி.மீ., அளவுள்ள துப்பாக்கி குண்டு இருந்தது.
விசாரணையில், கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த ஷிபு மேத்யூ, 48, என்பதும், துபாயில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 10 ஆண்டுகளாக பணிபுரிந்தது தெரிந்தது.
இதையடுத்து, சி.ஐ.எஸ்.எப்., போலீசார், அவரை கோவை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ஷூவில் துப்பாக்கி குண்டு எப்படி வந்தது என தெரியவில்லை என்று ஷிபு மேத்யூ தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பெண் ஒருவர் பையில் துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.