/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'மாறாத சாதிய மனநிலையும், ஏற்றத்தாழ்வும்!''மாறாத சாதிய மனநிலையும், ஏற்றத்தாழ்வும்!'
'மாறாத சாதிய மனநிலையும், ஏற்றத்தாழ்வும்!'
'மாறாத சாதிய மனநிலையும், ஏற்றத்தாழ்வும்!'
'மாறாத சாதிய மனநிலையும், ஏற்றத்தாழ்வும்!'
ADDED : பிப் 10, 2024 09:05 PM

எழுத்தாளர்கள் சக்தி சூரியா எழுதிய, 'நரவேட்டை' நாவல், ஹரிலால்நாத் எழுதிய 'மரிச்ஜாப்பி' மற்றும் யு.கே.சிவஞானம் எழுதிய, 'இந்தியாவை உலுக்கிய வைக்கம்' ஆகிய கட்டுரை நுால்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
கோவை ஆருத்ரா ஹாலில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், நடந்த புத்தக அறிமுக விழாவில், இந்நுால்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நிகழ்ச்சிக்கு, அமைப்பின் செயலாளர் ஆறுச்சாமி தலைமை வகித்தார்.
நரவேட்டை நாவல் குறித்து, எழுத்தாளர் சாமுவேல்ராஜ் பேசியதாவது: இந்த நாவல் தென் மாவட்டங்களில், வாழும் மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. சமூகத்தின் பழைய முகத்தை, இந்நாவல் படம் பிடித்து காட்டுகிறது. இந்த விஞ்ஞான உலகத்தில் எத்தனையோ, நவீன மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
ஆனால் இதன் தாக்கமே இல்லாமல் பல மாவட்டங்கள், ஊர்கள் தமிழகத்தில் உள்ளன. அந்த மக்களிடம் உள்ள சாதிய மனநிலையும், ஏற்ற தாழ்வுகளும் மாறவில்லை. இதனால் குற்றம் என்று தெரிந்தும், தொடர்ந்து பல குற்றங்களை செய்யும் மனிதர்கள் உள்ளனர்.
பெண்கள், தலித்துகள் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியவில்லை என்ற ஆதங்கத்தை, நாவலாசிரியர் மிக நுட்பமாக, இந்த நாவலில் பதிவு செய்துள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.
நுாலாசிரியர்கள் சக்தி சூரியா, யு.கே.சிவஞானம், சக்தீஸ்வரன் ஆகியோர் ஏற்புரையாற்றினர்.