/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இருசக்கர வாகன திருட்டு; சிறுவர்கள் உட்பட மூவர் கைது இருசக்கர வாகன திருட்டு; சிறுவர்கள் உட்பட மூவர் கைது
இருசக்கர வாகன திருட்டு; சிறுவர்கள் உட்பட மூவர் கைது
இருசக்கர வாகன திருட்டு; சிறுவர்கள் உட்பட மூவர் கைது
இருசக்கர வாகன திருட்டு; சிறுவர்கள் உட்பட மூவர் கைது
ADDED : ஜூலை 01, 2025 10:56 PM
கோவை; ரத்தினபுரி, குட்டி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் தங்கமணி, 34. இவர் கடந்த 29ம் தேதி மாலை தனது இருசக்கர வாகனத்தை, வீட்டின் முன் நிறுத்தி சென்றார்.
அவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது, மூன்று பேர் அங்கு நின்று கொண்டிருந்ததை கவனித்தார். பின்னர், இரவு வெளியில் செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த போது, வாகனம் காணாமல் போயிருந்தது.
ரத்தினபுரி போலீசில் புகார் அளித்த தங்கமணி, வாகனம் நிறுத்தும் போது அங்கிருந்த மூவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இருசக்கர வாகனம் அருகில் இருந்த நபர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் ரத்தினபுரி, சின்னம்மாள் வீதியை சேர்ந்த நாகேந்திரன், மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரித்ததில், மூவரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தை திருடியது உறுதியானது. அவர்கள் மறைத்து வைத்திருந்த இருசக்கர வாகனத்தை, பறிமுதல் செய்தனர். மூவரையும் கைது செய்து, நாகேந்திரனை மட்டும் சிறையில் அடைத்தனர்.