/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரும்பு கர்டர் துாக்கி வைக்க ரயில்வே 'கிரீன் சிக்னல்'; ஒரு மேம்பாலம் கட்டுறதுன்னா சும்மாவா! இரும்பு கர்டர் துாக்கி வைக்க ரயில்வே 'கிரீன் சிக்னல்'; ஒரு மேம்பாலம் கட்டுறதுன்னா சும்மாவா!
இரும்பு கர்டர் துாக்கி வைக்க ரயில்வே 'கிரீன் சிக்னல்'; ஒரு மேம்பாலம் கட்டுறதுன்னா சும்மாவா!
இரும்பு கர்டர் துாக்கி வைக்க ரயில்வே 'கிரீன் சிக்னல்'; ஒரு மேம்பாலம் கட்டுறதுன்னா சும்மாவா!
இரும்பு கர்டர் துாக்கி வைக்க ரயில்வே 'கிரீன் சிக்னல்'; ஒரு மேம்பாலம் கட்டுறதுன்னா சும்மாவா!
ADDED : ஜூலை 01, 2025 10:58 PM

கோவை; கோவை - அவிநாசி ரோட்டில், ஹோப் காலேஜ் ரயில்வே பாலத்தில் இரும்பு கர்டர் துாக்கி வைக்க, ரயில்வே அனுமதி கிடைத்து விட்டது. எட்டு மணி நேரத்துக்கு ரயில் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொடுக்க, சேலம் ரயில்வே கோட்டத்திடம் மாநில நெடுஞ்சாலைத்துறை கோரியுள்ளது.
கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. ஹோப் காலேஜ் பகுதியில் ரயில்வே மேம்பாலத்தில், 52 மீட்டர் நீளத்துக்கு இரும்பு கர்டர் பொருத்த வேண்டும்.
இதற்கு ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, அத்துறையினர் முன்னிலையில், கர்டர் துாக்கி வைக்க வேண்டும். அச்சமயம் ரயில் போக்குவரத்தை நிறுத்த வேண்டும்.
இதற்காக, மாநில நெடுஞ்சாலைத்துறையில் இருந்து, ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது.
அரக்கோணத்தில் உள்ள ரயில்வே பணிமனை அதிகாரிகள் வருகை தந்து, இரும்பு கர்டர்கள் இணைப்பு பணியை ஆய்வு செய்து, உறுதிப்படுத்தியுள்ளனர்.
துாண்கள் மீது இரும்பு கர்டர்களை துாக்கி வைக்க, சென்னை ரயில்வே மேம்பால தலைமை பொறியாளர் மற்றும் முதன்மை தலைமை பொறியாளர் ஆகியோர் அனுமதி அளித்துள்ளனர்.
மொத்தம், 8 கர்டர் வைக்க வேண்டும். நாளொன்றுக்கு தலா ஒரு மணி நேரம் வீதம் அனுமதி கொடுத்தால், எட்டு நாட்களுக்கு ரயில் போக்குவரத்தை நிறுத்திக் கொடுக்க வேண்டும்.
நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் என்றால் நான்கு நாட்கள் நிறுத்தி தர வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது.
ரயில் போக்குவரத்தை நிறுத்திக் கொடுக்க, சேலம் ரயில்வே கோட்டத்திடம், மாநில நெடுஞ்சாலைத்துறை வலியுறுத்தியுள்ளது.