Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாலிபருக்கு கத்திக்குத்து பீர்பாட்டிலால் அடி; இருவர் கைது

வாலிபருக்கு கத்திக்குத்து பீர்பாட்டிலால் அடி; இருவர் கைது

வாலிபருக்கு கத்திக்குத்து பீர்பாட்டிலால் அடி; இருவர் கைது

வாலிபருக்கு கத்திக்குத்து பீர்பாட்டிலால் அடி; இருவர் கைது

ADDED : மே 22, 2025 12:59 AM


Google News
கோவை,; வுரிபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் அருண்குமார், 21; தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். கடந்த 19ம் தேதி தனது உறவினரான விக்னேஷ் என்பவருடன் கருணாநிதி நகர், டாஸ்மாக் மதுக்கடைக்கு மது குடிக்க சென்றார். அங்கு வந்த டேவிட் ராஜன், 24 என்பவர் மது வாங்க அருண் குமாரிடம் பணம் கேட்டுள்ளார்.

அருண் குமார் பணம் தர மறுத்து, அங்கிருந்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து, சவுரிபாளையம், மாரியம்மன் கோவில் அருகில், அருண் குமார் மற்றும் விக்னேஷ், தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, டேவிட் ராஜன் தனது நணபர் கமலேஷ் ஆகியோர் அருண் குமாரை வழிமறித்தனர்.

அப்போது, கமலேஷ் தான் வைத்திருந்த பீர் பாட்டிலால், அருண் குமாரின் தலையில் தாக்கி, அவரது பாக்கெட்டில் இருந்து ரூ.2,000 ஆயிரத்தை எடுத்தார்.

பின்னர், டேவிட் ராஜன், கத்தியால் குத்தினார். அருண் குமாரின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்த இருவரும், அங்கிருந்து தப்பினர்.

சம்பவம் குறித்து அருண் குமார், பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உக்கடம், புல்லுக்காடு பகுதியை சேர்ந்த கமலேஷ், 24 மற்றும் கணபதியை சேர்ந்த டேவிட் ராஜன், 24 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us