/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளஸ் 2 பொதுத்தேர்வில் இரட்டையர் ஒரே மதிப்பெண் பிளஸ் 2 பொதுத்தேர்வில் இரட்டையர் ஒரே மதிப்பெண்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் இரட்டையர் ஒரே மதிப்பெண்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் இரட்டையர் ஒரே மதிப்பெண்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் இரட்டையர் ஒரே மதிப்பெண்
ADDED : மே 11, 2025 11:56 PM

கிணத்துக்கடவு; மதுக்கரை, வழுக்குப்பாறையை சேர்ந்தவர்கள் அகல்யா மற்றும் அக் ஷயா. இவர்கள் இருவரும் இரட்டைசகோதரிகள். இவர்களது தந்தை குழந்தைவேலு மற்றும் தாய் ஸ்ரீதேவி விவசாயம் செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும், கிணத்துக்கடவு முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளனர். இருவருக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், அடுத்தடுத்த பதிவு எண்கள் வழங்கப்பட்டது. தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானதில், இருவரும் பாட அளவில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றாலும், மொத்தமாக ஒரே மதிப்பெண், 555 பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். இருவரையும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பி.டி.ஏ., தலைவர் திருநாவுக்கரசு மற்றும் மாணவர்கள் என பலர் பாராட்டினர்.
மாணவியர் கூறுகையில், 'பிளஸ் 2 பொதுத்தேர்வில் இருவரும் 555 ஒரே மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவு உறுதுணையாக இருந்தனர். தற்போது இருவரும் 'நீட்' தேர்வு எழுதி உள்ளோம். இதன் முடிவுக்காக காத்திருக்கிறோம்' என்றனர்.