/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மானியத்தில் சோளம் விதை; விவசாயிகளுக்கு அழைப்பு மானியத்தில் சோளம் விதை; விவசாயிகளுக்கு அழைப்பு
மானியத்தில் சோளம் விதை; விவசாயிகளுக்கு அழைப்பு
மானியத்தில் சோளம் விதை; விவசாயிகளுக்கு அழைப்பு
மானியத்தில் சோளம் விதை; விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மே 12, 2025 12:14 AM

அன்னுார்; அன்னுார் வட்டார வேளாண் துறை சார்பில், உழவர் விழா அன்னூரில் நடந்தது. காளான் வளர்ப்புமற்றும் சோள பயிர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் பிந்து தலைமை வகித்து பேசுகையில், ''அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில், காட்டம்பட்டி, மசக்கவுண்டன் செட்டிபாளையம், கணுவக்கரை, வடக்கலுார் ஆகிய நான்கு ஊராட்சிகள் தேர்வாகியுள்ளன,'' என்றார்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் கோமதி முன்னிலை வகித்தார்.
திட்ட ஆலோசகர் மாரியப்பன் பேசுகையில், ''மக்காச்சோளத்திற்கு நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். மண் பரிசோதனைக்கு ஏற்றபடி தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும். விதையை நான்கு செ.மீ., ஆழத்தில் ஊன்றி விதைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரே பயிர் செய்யாமல் பயிர் சுழற்சி செய்ய வேண்டும்,'' என்றார்.
வேளாண் அறிவியல் நிலைய இளநிலை ஆராய்ச்சியாளர் துரைசாமி, கோடை உழவால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினார்.
உதவி வேளாண் வணிக அலுவலர் வினோத்குமார், விளை பொருட்களை மதிப்புக்கூட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாயிலாகவும், தேசிய மின்னணு வேளாண் சந்தை வாயிலாகவும் விற்பனை செய்யும் முறை குறித்து விளக்கினார்.
'சோள விதை மானியத்தில் கிலோ 30 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது,' என தெரிவிக்கப்பட்டது.
உதவி வேளாண் அலுவலர் லோகநாயகி, தொழில் நுட்ப மேலாளர்கள் பிரபு, முனுசாமி உள்ளிட்டோர் பேசினர்.
விவசாயிகள் வனவிலங்குகளால் பயிருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து புகார் தெரிவித்தனர்.