Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வேரில் அமிலத்தை கொட்டி மரங்கள் 'கொலை!' கவனிக்க வேண்டும் 'கமிட்டி'

வேரில் அமிலத்தை கொட்டி மரங்கள் 'கொலை!' கவனிக்க வேண்டும் 'கமிட்டி'

வேரில் அமிலத்தை கொட்டி மரங்கள் 'கொலை!' கவனிக்க வேண்டும் 'கமிட்டி'

வேரில் அமிலத்தை கொட்டி மரங்கள் 'கொலை!' கவனிக்க வேண்டும் 'கமிட்டி'

UPDATED : பிப் 25, 2024 01:54 AMADDED : பிப் 24, 2024 08:58 PM


Google News
Latest Tamil News
-நமது நிருபர்-

ஒரு பக்கம் ஆண்டுதோறும் கோவையில் வெயில் அதிகரித்து வரும் நிலையில், கோவை நகரில் சமீபகாலமாக ரோட்டோர மரங்களை வெட்டுவது, அமிலம் ஊற்றுவது, தீ வைப்பது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.

குளுமைக்குப் பெயர் பெற்ற கோவை நகரில், கடந்த சில ஆண்டுகளாக வெப்பத்தின் அளவு அதிகமாகிக் கொண்டே போகிறது. பிப்ரவரியிலேயே வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு வளர்ச்சிப் பணிகள் பெயரிலும், கட்டமைப்பு வசதிகளுக்காகவும் பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டதும் முக்கியக் காரணமாகும்.

இதற்கு மாற்றாக, மரங்கள் வைப்பதையும் எந்த அரசுத்துறையும் உறுதி செய்வதில்லை. இந்நிலையில், மாநகராட்சிக்குச் சொந்தமான ரோடுகளில் குடியிருப்போர் நலச்சங்கத்தினராலும், தன்னார்வலர்கள் மற்றும் சூழல் ஆர்வலர்களாலும் வளர்க்கப்படும் மரங்களுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக, இந்த மரங்கள் அற்பமான காரணங்களுக்காக வெட்டி வீழ்த்தப்படுகின்றன.

கட்டடத்தை மறைக்கிறது, பெயர்ப்பலகை தெரியவில்லை, குப்பை விழுகிறது என பல காரணங்களைக் கூறி, தனிநபர்கள் தங்களின் சுய விருப்பு, வெறுப்புகளுக்காக மரங்களை எந்த அனுமதியும் பெறாமல் வெட்டி வீழ்த்துகின்றனர்.

ரோட்டோரத்தில் வளர்க்கப்படும் மரங்களுக்கு, அமிலம் ஊற்றும் அளவுக்கு அக்கிரமம் அரங்கேறியுள்ளது.

கே.கே.புதுார் கோஆபரேட்டிவ் காலனியில், சில நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் சிலர் வளர்த்து வந்த அலங்கார மரங்களுக்கு அமிலம் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டு, போலீசில் புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களை அழிக்க நினைப்பதற்கு, நிரந்தர முடிவு கட்ட வேண்டியது, கலெக்டர் தலைமையிலான பசுமை கமிட்டியின் பொறுப்பு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us