Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உதவி விதை அலுவலர்களுக்கு பயிற்சி

உதவி விதை அலுவலர்களுக்கு பயிற்சி

உதவி விதை அலுவலர்களுக்கு பயிற்சி

உதவி விதை அலுவலர்களுக்கு பயிற்சி

ADDED : மார் 25, 2025 05:56 AM


Google News
கோவை; கோவை மாவட்டத்தில், அனைத்து உதவி விதை அலுவலர்களுக்கு, விதைச்சான்று நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறை இயக்குநர் மாரிமுத்து தலைமை வகித்தார்.

சான்று பெற்ற விதைகளின் முக்கியத்துவம், சான்று விதை உற்பத்தியில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவர் விளக்கினார்.

விதைப்பு அறிக்கை தயாரித்தல், விதைப்பறிக்கையை 'சதி' தளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக, விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) சதாசிவம் பயிற்சி அளித்தார்.

விதைச்சான்று அலுவலர் ஹேமலதா, வயலாய்வு பணியின்போது கலவன் நீக்குதல், குறித்தறிவிக்கப்பட்ட நோய் தாக்கிய பயிரை அகற்றுதல், மகசூல் கணக்கீடு முறை, பயிர் ரகங்களின் குணாதிசயங்களைக் கண்டறிதல் குறித்து விவரித்தார்.

விதைச்சான்று அலுவலர் நந்தினி, விதை சுத்தி பணிகள், சான்றளிப்பு, பதிவேடு பராமரிப்பு மற்றும் சுத்தி பணியின்போது கவனிக்க வேண்டியவை, விதை மாதிரிகள் எடுக்கும் முறை, விதை பகுப்பாய்வு முடித்து தேர்ச்சி பெற்ற விதைகளுக்கு சான்று அட்டை பெற்று, சான்று செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.

விதைச்சான்று அலுவலர்கள் பிரியதர்ஷினி, செல்லம்மாள், உதவி விதை அலுவலர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us