/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குழாய் உடைப்பால் சேதமான சாலை சீரமைக்காததால் போக்குவரத்து பாதிப்பு குழாய் உடைப்பால் சேதமான சாலை சீரமைக்காததால் போக்குவரத்து பாதிப்பு
குழாய் உடைப்பால் சேதமான சாலை சீரமைக்காததால் போக்குவரத்து பாதிப்பு
குழாய் உடைப்பால் சேதமான சாலை சீரமைக்காததால் போக்குவரத்து பாதிப்பு
குழாய் உடைப்பால் சேதமான சாலை சீரமைக்காததால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 06, 2025 11:46 PM

மேட்டுப்பாளையம்; குடிநீர் குழாய் உடைப்பால், சேதமடைந்த அன்னூர் சாலை, 15 நாட்கள் ஆகியும் இன்னும் சீரமைக்கவில்லை.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து, திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்டத்துக்கு, இரும்பு குழாய் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், நடூர் பாலம் அருகே, இக்குடிநீர் குழாயில், கடந்த மாதம், 23ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. குழாயில் இருந்து, 25 அடி உயரத்துக்கு தண்ணீர் பீறிட்டு அடித்தது.
திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள், உடைப்பு ஏற்பட்ட இடத்தில், குழி தோண்டி,உடைப்பை சரி செய்தனர்.ஆனால் குழியை மூடாமலும், சேதமடைந்த சாலையை சீரமைக்காமலும் அப்படியே விட்டுவிட்டனர். இது குறித்து தினமலரில் போட்டோவுடன் செய்தி வெளியானது. உடனடியாக குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில், தோண்டிய குழிக்கு, அதிகாரிகள் மண் கொட்டி குழியை மூடினர்.
ஆனால், சாலையின் இரு பக்கம், மண் அரிப்பால் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யாமல் விட்டு விட்டனர். இதனால் இவ்வழியாக ஒரு வாகனங்கள் மட்டுமே செல்ல முடிகிறது. சாலை சேதமடைந்து, 15 நாட்கள் ஆகின்றன.
ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளும், சாலையை சீர் செய்யாமல் காலம் கடத்தி வருகின்றனர்.
சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.