/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சாரல் மழை பொழிவு: சுற்றுலா பயணியர் குஷிசாரல் மழை பொழிவு: சுற்றுலா பயணியர் குஷி
சாரல் மழை பொழிவு: சுற்றுலா பயணியர் குஷி
சாரல் மழை பொழிவு: சுற்றுலா பயணியர் குஷி
சாரல் மழை பொழிவு: சுற்றுலா பயணியர் குஷி
ADDED : ஜன 04, 2024 11:18 PM
வால்பாறை:வால்பாறையில், பரவலாக பெய்த சாரல் மழையால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளுக்கு அணைகள் எதுவும் நிரம்பவில்லை. இதனால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில், வால்பாறையில் கடந்த சில நாட்களாக காலை, மாலை நேரங்களில் எஸ்டேட் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியதால், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கடந்த இரு நாட்களாக பரவலாக சாரல்மழை பெய்கிறது. இதனால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.