/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தக்காளி அறுவடை; தயாராகும் விவசாயிகள் தக்காளி அறுவடை; தயாராகும் விவசாயிகள்
தக்காளி அறுவடை; தயாராகும் விவசாயிகள்
தக்காளி அறுவடை; தயாராகும் விவசாயிகள்
தக்காளி அறுவடை; தயாராகும் விவசாயிகள்
ADDED : ஜூன் 12, 2025 09:57 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், நீர் ஆதாரங்கள் திருப்தியாக இருப்பதால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள், அறுவடையை துவங்க தயாராகி வருகின்றனர்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், கடந்த மாசி பட்டத்தில் விவசாயிகள், தக்காளி சாகுபடி செய்திருந்தனர். காலநிலை மாறுபாட்டால் கடும் வெயில் நிலவியது. வெப்பத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தக்காளி செடிகள் கருகின. விளைச்சல் பாதிப்பால் தக்காளி வரத்தும் குறைந்து காணப்பட்டது.
தட்டுப்பாடு காரணமாக, தக்காளி விலை உயர்ந்தது. உச்ச விலைக்கு விற்பனையான போதிலும் போதிய விளைச்சல் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.
இதையடுத்து, கடந்த வைகாசி பட்டத்தில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர். மே மாதம் இறுதியில், மழைக்குப் பின், குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக, தக்காளி செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து பூக்கத் துவங்கி உள்ளன. இனி வரும் நாட்களில், அறுவடையை துவங்கவும் விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்நிலையில், மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து வழக்கம் போல் காணப்படுகிறது. கடந்த, இரு வாரங்களுக்கு முன், 15 கிலோ பெட்டி 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது, 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.