/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகிழ்ச்சி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகிழ்ச்சி
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகிழ்ச்சி
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகிழ்ச்சி
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 12, 2025 09:56 PM

வால்பாறை; பி.ஏ.பி., அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில் இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.
மழை நீடிப்பதால், வால்பாறையில் உள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்ததோடு, அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது.
பருவமழை தொடர்வதால் தேயிலை விவசாயிகளும், பி.ஏ.பி., பாசன விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை நிலவரப்படி, 96.15 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,110 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 890 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:
சோலையாறு - 23, பரம்பிக்குளம் - 2, வால்பாறை - 27, மேல்நீராறு - 53, கீழ்நீராறு - 42, ஆழியாறு - 4 என்ற அளவில் மழை பெய்தது.